Loading...
 

சமூக மேலாளர்

 

சமூக மேலாளர் என்பவர் இணையம் மற்றும்  கிளப்பின் சமூக ஊடகம் வாயிலான செயல்பாடுகளுக்கு பொறுப்பானவர் ஆவார்.

இணையத்தில் வலுவான இருப்பை உருவாக்குவது

இணையத்தில் கிளப்பின் வலுவான இருப்பானது புதிய உறுப்பினர்கள், விருந்தினர்கள் மற்றும் ஊடக ஆர்வத்திற்கான காந்தம் போன்றது.

இணையத்தில் கிளப்பின் வலுவான இருப்பை வளர்ப்பதற்கு வாரத்திற்கு குறிப்பிட்ட சில மணிநேரங்களை ஒதுக்கத் திட்டமிடுங்கள். எத்தனை மணிநேரம் என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.

விடாமுயற்சியும் ஒழுங்குமுறையும் வெற்றிகரமான சமூக மேலாளர்களின் சில ரகசியங்களாக திகழுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது இடுகையிட முயற்சி செய்யவும்.

 

இடுகையிடக் கூடிய விஷயங்கள்

எவற்றையெல்லாம் இடுகையிடலாம் என்பது குறித்த சில யோசனைகள் இதோ இங்கே:

  • நிச்சயமாக ... சந்திப்பு மற்றும் பிற நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்புகள்.
  • புதிய உறுப்பினர்களை வாழ்த்தி வரவேற்பு.
  • பிற கிளப்புகள் அல்லது Agora Speakers International உடைய இடுகைகளைப் பகிர்வு.
  • உறுப்பினர்களின் சாதனைகளை அங்கீகரித்து இடுகையிடுவது - Agora உடைய கல்வித் திட்டத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும். இதில் இரண்டாவதாக கூறப்பட்டவர்களுக்கு, அந்த சாதனைகள் கிளப்பின் நோக்கத்திற்கு ஓரளவு தொடர்புடையதாக இருக்க வேண்டும். ஒரு உறுப்பினர் ஒரு புத்தகத்தை வெளியிட்டால் அல்லது ஒரு மாநாட்டில் ஒரு முக்கிய சொற்பொழிவை வழங்கினால் - அவை நல்ல உதாரணங்கள்.
ஒருவர் தனது சொந்த பெயர் வெளியிடப்பட்டிருப்பதைக் காண்பதும், மற்றவர்களும் அதே அங்கீகாரத்தைப் பெற ஊக்குவிக்கிறவாறு அமைவதையும் விட சக்தி வாய்ந்த விஷயம் எதுவும் இல்லை.
  • சந்திப்பின் பதிவுகள்.
  • நீங்கள் விரும்பும் சொற்பொழிவு உதாரணங்களின் பகிர்வு.
  • மொழி மேம்பாட்டு விளக்கப்படங்கள், உதவிக்குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எப்போதும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன, குறிப்பாக உறுப்பினர்களின் சொல்வளத்தை வளப்படுத்துபவை நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

Nice

  • சந்திப்பைத் தவறவிட்ட உறுப்பினர்களுக்காக அச்சந்திப்புகளின் சுருக்கங்கள்.

எல்லாவற்றையும் நீங்களே கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை - யோசனைகளையும் தலைப்புகளையும் பரிந்துரைக்குமாறு உறுப்பினர்களை ஊக்குவிக்கவும்.

ஒரு சமூக மேலாளராக, நீங்கள் விஷயங்களை இடுகையிடும்போது, உங்கள் சார்பாக நீங்கள் தனிப்பட்ட முறையில் இடுகை இடவில்லை எனவும், கிளப்பின் சார்பாக இடுகை இடுகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்க. எனவே, நீங்கள் நடுநிலை கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.
எல்லா தளங்களிலும் நீங்கள் தொடர்ச்சியாக புதிய விஷயங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு முகநூலில் பகிரப்பட்ட அந்தக் கட்டுரையை கூட இந்த வார திரும்பிப் பார்க்கும் விஷயமாக மீண்டும் இடுகையிடலாம்.

 

இடுகையிடுவதற்கான பயனுள்ள குறிப்புகள்

 

நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய சில பயனுள்ள உதவிக்குறிப்புகள் இதோ இங்கே:

  • ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தவும். Agora ஹேஷ்டேக்குகளின் கலவையை (#AgoraSpeakers, #SpeakLeadMakeHistory, முதலியன) உங்கள் சொந்த உள்ளூர் கிளப் குறிச்சொற்களுடன், இடுகையிடுவதற்கு பொருத்தமான குறிச்சொற்களுடன் பயன்படுத்தவும்.
  • உங்கள் கிளப்பின் சமூக ஊடக இடுகைகளில் சுவாரஸ்யமான நபர்களை டேக் செய்யவும் அல்லது @குறிப்பிடவும் - (இந்தச் செயல்பாடு மார்க்கெட்டிங் துணைத் தலைவருடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்). ஊடகங்கள், உள்ளூர் தலைவர்கள், பிரபலங்கள், வருங்கால உறுப்பினர்கள் போன்ற விஷயங்களில் ஆர்வமுள்ள நபர்களை சுவாரஸ்யமான இடுகைகளில் டேக் செய்வது அவர்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சிறந்த வழியாகும், இதனைக் கவனமாக செய்யும் வரை.
  • நீங்கள் அர்த்தமுள்ள பதில்களை வழங்கக்கூடிய குழுக்களைக் கண்காணிக்கவும். அனைத்து வகையான கேள்விகளையும் கேட்கக்கூடிய நபர்கள் பல குழுக்கள் உள்ளனர், அவற்றுக்கு நீங்கள் பதிலளிக்கலாம்  - சந்திப்பு குழுக்கள், பொது முகநூல் குழுக்கள், கோரா, ரெடிட் போன்றவை. வழக்கமாக, நீங்கள் பின்வரும் விஷயங்கள் குறித்த தொகுப்பை கண்காணிக்க வேண்டும்:
    • பொது சொற்பொழிவு
    • விவாதம்
    • விமர்சன ரீதியான சிந்தனை
    • மேடை பயம்
    • தொழில்முறை ரீதியான சொற்பொழிவு
    • விற்பனை விளக்கக்காட்சிகள்
    • தலைமைத்துவம்
    • தொழில் ரீதியான வளர்ச்சி
    • சுய முன்னேற்றம்
    • தன்னம்பிக்கை
    • ... பொதுவாக, நாங்கள் பயிற்சி அளிக்கும் ஏதேனும் திறமைகள்
  • நீங்கள் ஒரு சுவாரஸ்யமான கருத்தை அல்லது இடுகையைப் பார்த்தால், நீங்கள் பதிலளிக்கலாம். வழக்கமாக, பதில் வெறுமனே ஸ்பேமாக இல்லாமல், சில ஆழமான நோக்கம் மற்றும் உள்ளடக்கத்தை வழங்கினால், நீங்கள் சில விளம்பர ஹேஷ்டேக்குகளை சேர்க்க அனுமதிக்கப்படுவீர்கள், நீங்கள் உங்களுடைய கிளப்பின் இணைப்பைக் கூட சேர்க்கலாம்.

உள்ளடக்கத்தை தணிக்கைச் செய்வது மற்றும் குழுவின் விதிமுறைகள்

ஒரு சமூக மேலாளராக, உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் கருத்துகளை இடுகையிடக்கூடிய குழுக்களின் சூழல், நாகரிகம் மற்றும் பிறரின் கவனத்தைப் பெறுதல் ஆகியவற்றுக்கு நீங்களே பொறுப்பு. அனைத்து குழுக்களிலும் பொதுவான Agora கொள்கைகள் சிலவற்றை செயல்படுத்த வேண்டும், அவை பின்வருமாறு:

  • வெறுக்கத்தக்க பேச்சு எதுவும் அனுமதிக்கப்படாது.
  • துணை விதிகளுக்கு மாறாக (போலி அறிவியல் உட்பட) தலைப்புகளை விளம்பரப்படுத்த அனுமதி இல்லை.

அவை தவிர, இணையத்தில் கிளப் உடைய இருப்பின் பொதுவான அளவுருக்களை நீங்கள் சுதந்திரமாக வரையறுக்கலாம், அவை:

  • விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் இடுகையிட அனுமதிப்பீர்களா?
  • வணிக ரீதியான இடுகைகளை அனுமதிப்பீர்களா? அவை எவ்வகையானது?
  • எந்தத் தலைப்புகள் செல்லுபடியானது என கருதப்படுகிறது?

 

கருத்துக்களுக்கு பதிலளிப்பது

ஒரு சமூக மேலாளராக, பொதுவான கருத்துக்களுக்கும், வெவ்வேறு மூலங்களிலிருந்து பெறும் கேள்விகளுக்கும் பதிலளிப்பது, மற்றும் அதனை கையாளுவது உங்கள் பொறுப்புகளில் அடங்கும்.

  • எழுதிய நபருக்கு, கடுமையாக விமர்சனம் எழுதியவர்களுக்கு கூட நன்றி தெரிவிப்பதன் மூலம் எப்போதும் தொடங்கவும்.
  • எல்லா கோரிக்கைகளுக்கும் ஒரே நாளைக்குள் பதிலளிக்க முயற்சி செய்யவும்.
  • குறிப்பிட்ட கோரிக்கை தொடர்பான தகவலை வழங்கவோ அல்லது அதனை கையாளுவது நாட்கள் பிடிக்குமானால், கோரிய தகவலுடன் கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன் என்று நீங்கள் அந்த நபருக்கு சுருக்கமாக பதிலை எழுதுங்கள், நீங்கள் எத்தனை நாளைக்குள் தேவையான பதிலினை வழங்குவீர்கள் என்பதன் மதிப்பீட்டையும் வழங்க முயற்சி செய்யவும். உதாரணமாக, "நாங்கள் ஏற்கனவே உலகளவில் 200 கிளப்புகளை கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன், ஆனால் சரியான எண்ணிக்கையை பெற்று, நான் உங்களுக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன்", என்பது போன்ற சுருக்கமான பதிலை கோரிக்கையை பெற்றவுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பலாம்.
  • கேள்வியானது Agora பற்றியும், அது செயல்படும் விதம் பற்றியும் என்றால், அது குறித்து உங்களுக்கு பதில் தெரியாவிட்டால், உங்கள் சக கிளப் அலுவலர்களையோ அல்லது எங்களையோ (info@agoraspeakers.org) அணுகவும், நாங்கள் உங்களுக்கு அது குறித்து உதவுவோம்.
  • அந்தக் கருத்து எவ்வளவு எதிர்மறையாக இருந்தாலும் சரி, அதனை விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்த முயற்சிக்கவும்.
  • எவருடனும் ஒருபோதும் விவாதத்தைத் தொடங்க வேண்டாம். நீங்கள் விஷயத்தை பெரிதாக்குவது மட்டுமல்லாமல், அத்தகைய இடுகைக்காக பின்தொடர்பவர்களையும் பெறுவீர்கள். மிகவும் எதிர்மறையான கருத்துக்களை சிறப்பாக கையாளுவதற்கான சில உதாரணங்களை இங்கே காணலாம்.
கருத்துக்களும் கேள்விகளும் நேரடியாக (கிளப்புக்கு குறுஞ்செய்திகளாக அல்லது மின்னஞ்சல்களாக) மட்டுமல்லாமல், குழுவின் வாயிலாக இடுகைகள், கருத்துகள், வேறொருவரின் தனிப்பட்ட கணக்கில் கிளப்பின் 
பெயரைக் @குறிப்பிடுவது என பல வழிகளிலும் வரக்கூடும் என்பதை நினைவில் கொள்க.ஏதேனும் கேள்வியோ கருத்தோ பதிலளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்த சேனல்கள் அனைத்தையும் கண்காணிக்க முயற்சி செய்யவும்.

 

தனியுரிமைப் பற்றிய குறிப்பு

இன்றைய உலகில் தனியுரிமை என்பது அடிப்படையான விஷயமாக இருக்கிறது, மற்றவர்களின் சொந்த தகவல்களைக் கட்டுப்படுத்த அவர்களின் உரிமையை கவனக்குறைவாக மீறுவதைத் தவிர்க்க நீங்கள் குறிப்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுவது, ஏராளமான தேவையான விஷயங்களைக் உருவாக்குவது மட்டுமல்லாமல், நீங்கள் ஒரு உறுப்பினரை இழக்கவும் நேரிடும், கிளப்பைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களின் இடுகைகளையும் நீங்கள் பெறுவீர்கள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அதிகார வரம்புகளில் உள்ள சட்ட ரீதியான பிரச்சினைகளையும் கூட நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

  • பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பிறர் காணும் விதமாக, குழுவாக தொடர்பு  கொள்ளும் அமைப்புகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர். உதாரணமாக, ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்குவது அனைவரின் தொலைபேசி எண்ணையும் தானாகவே மற்ற அனைவருக்கும் காண்பிக்கும்.
  • தொடர்புத் தகவலைப் பற்றி கேட்கும்போது, ​​எப்போதும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அனுமதி கேட்கவும் அல்லது தகவல் பரிமாறிக்கொள்ளும் முறையை மாற்றியமைக்கவும்.
    உதாரணமாக, பின்வரும் கோரிக்கையை நீங்கள் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்:

    "வணக்கம், நாங்கள் ஸ்பீக்கர்ஸ்ஆஃப்டுமாரோ (SpeakersOfTomorrow) என்ற நிறுவனத்தைத் சேர்ந்தவர்கள். எங்கள் மாநாட்டிற்கு முக்கிய பேச்சாளர்களை நாங்கள் தேடுகிறோம், எனவே நான் கிளப் தலைவர் ஜான் டோவை தொடர்புக்கொண்டு, அவருடன் விஷயங்களை பிரத்தியேகமாக விவாதிக்க விரும்புகிறேன். எந்த தொலைபேசி எண்ணில் நான் அவரைத் தொடர்புக் கொள்ளலாம்?"

    வேறொருவரின் தொலைபேசி எண்ணை உடனடியாக வழங்குவதற்கு பதிலாக, நீங்கள் பின்வருமாறு செய்யலாம்:

    1) முதலில் தலைவரிடம் கேட்கவும், பின்னர் அவர் ஒப்புக்கொண்டால் தகவல்களை வழங்கவும் 
    2) பின்வருமாறு அவர்களுக்குத் தகவல் தெரிவியுங்கள்: "இந்தக் கோரிக்கைக்கு மிக்க நன்றி. விரைவில் உங்களை அழைக்குமாறு ஜானிடம் கேட்டுக்கொள்கிறேன். அவர் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம், எத்தனை மணிக்கு உங்களை அழைத்தால் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்?"

 

 


Contributors to this page: agora and shahul.hamid.nachiyar .
Page last modified on Wednesday November 10, 2021 15:01:44 CET by agora.